Translations:Welcome to Wikipedia (Bookshelf)/25/ta

From Outreach Wiki
Jump to navigation Jump to search
  • [உரையாடல்] ஒவ்வொரு கட்டுரையின் மேற்புறமும்,உரையாடல் என்ற தத்தல் இருக்கும். இவ்வுரையாடற் பக்கத்தில், அக்கட்டுரையைக் குறித்த வடிவத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும், மற்றவரின் கருத்தொற்றுமைக்கும் , பிற பங்களிப்பாளர்களிடம் உதவிக்கும் தேவையான உரையாடல்களை நிகழ்த்தலாம்.
  • [அண்மைய மாற்றங்கள்] அண்மைய மாற்றங்கள் என்ற பக்கத்தில், காலநேரவரிசை அடிப்படையில், விக்கிப்பீடியக் கட்டுரைகளில் ஏற்படும் மாற்றங்களை, உடனுக்குடன் காணலாம். மேலும், அங்கு ஒவ்வொரு கட்டுரையின் பெயருக்கு அடுத்துத் தெரியும் வேறுபாடு என்ற சொல்லை அழுத்துவதன் மூலம், அக்கட்டுரையில் செய்யும் உள்ளீடுகளை கண்காணித்துத் தவறுகளைக் களையலாம்.
  • [உதவி] உதவி விக்கிப்பீடியக் கட்டகம் உருவாக்குதல் குறித்தவைகளை இங்கு கற்கலாம்.
  • [விக்கிப்பீடிய மொழிகள்] 250 -க்கும் மேற்பட்ட மொழிகளில், விக்கிப்பீடியா உள்ளது.


 :[Sara {new012.bmp}] இங்குள்ள கட்டுரையை யார் உருவாக்குவர்? இதனை விரும்புகின்றனரா! எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், இதனை விட சிறப்பானக் கட்டுரையொன்றை என்னால் உருவாக்க முடியும்.

  • [புதிய கணக்கைத் தொடங்கவும்] விக்கிப்பீடியா இணையப்பக்கத்தின் மேல் வலப்புறமுள்ள, கணக்கைத் தொடங்கவும் என்பதன் வழியாக, விக்கியின் உதவிகளையும், சிறப்புத்தன்மைகளையும் அணுகிப் பெறலாம். மேலும், உங்களின் தன்விவரப் பக்கமொன்றையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
  • [வரலாற்றைக் காட்டவும்] வரலாற்றைக் காட்டவும் என்ற தத்தலின் வழியாகச் சென்று அப்பக்கம் உருவான வரலாற்றை, ஒப்பிட்டு அறியலாம்.
  • [தேடுக] தேடுக என்ற வசதி வழியே, நீங்கள் தேடும் கட்டுரையொன்றை அடையலாம். அக்கட்டுரை இல்லையெனில், நீங்கள் தேடிய சொல்/சொற்கள் உள்ள கட்டுரைகளை, தேடல் விளைவாகக் காணலாம்.